புதியதாக 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆனால், 200 ரூபாய் நோட்டுகள் உடனடியாக ஏ.டி.எம்.களில் கிடைக்காது. அதற்கேற்ற வகையில் ஏ.டி.எம். எந்திரங்களில் சில மாற்றங்களை செய்த பின்னரே 200 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம்.களில் பெற்றுக் கொள்ள முடியும்.
நாட்டில் உள்ள 2 லட்சம் ஏ.டி.எம்.களில் உடனடியாக 200 ரூபாய் நோட்டுகளை வைப்பது சாத்தியமல்ல. மெல்ல மெல்லவே 200 ரூபாய் நோட்டுக்கள் ஏ.டி.எம்களில் மாற்றங்களைச் செய்து கிடைக்க வழி வகை செய்யப்படும்.. 200 ரூபாய் வடிவங்களுக்கு ஏற்ற வகையில் ஏ.டி.எம். மெஷின்களில் சில உள் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய வேண்டியது இருக்கிறது. அதற்கு பின்னரே, 200 ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம் மெஷின்களில் இருந்து பெற முடியும்.
தற்போது 100,500,2000 ஆயிரம் நோட்டுகளுக்கு ஏற்ற வகையில்தான் ஏ.டி.எம் பாக்ஸ்கள் செய்யப்பட்டுள்ளன.66 mm X 146mm அளவில் இருக்கும் 200 ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம்.களில் வெளியாக குறைந்தது ஒரு வார காலம் பிடிக்கும்.