மொபைல் போன் விலை உயர வாய்ப்பு - பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் இங்கே...

2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

பாஜக தலைமையிலான இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்த 5-ஆவது பட்ஜெட் இதுவாகும். அதே போல, பாஜக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட்டும் இதுதான். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் பாஜக அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது.

இந்நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.

பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் அளிக்கப்பட உள்ளது. அதே சமயம் வருமான வரியில் ஏமாற்றம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

தனி நபர் வருமான வரி ஆண்டு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இன்றி ரூ.2.5 லட்சமாகத் தொடரும். பெரு நிறுவனங்களுக்கான 'கார்ப்பரேட் வரி' குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வருமானம் உள்ள நிறுவனங்களுக்கான வரி தற்பொழுது உள்ள 30% - லிருந்து 25% ஆக குறைக்கப்படுகிறது.

தனிநபர் வருமான வரி வருவாய் உயர்வு:

மாத ஊதியம் பெறுபவர்களுக்கான நிரந்தர வரிக் கழிவு ரூ.40 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

50 வயது வரை உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் 80 வயது வரையுள்ள மிக மூத்த குடிமக்கள் ஆகியோர் மருத்துவக் காப்பீட்டுக்குச் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு 80G பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கு வங்கி சேமிப்பில் கிடைக்கும் வட்டியில், ரூ.10 ஆயிரம் வரையிலான வட்டிக்கு இதுவரை வரி விலக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இது மாற்றப்பட்டு, மூத்த குடிமக்கள் வங்கி சேமிப்பில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையால் வரி வருவாய் உயர்ந்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.90 ஆயிரம் கோடி கூடுதல் வருமான வரி கிடைத்துள்ளது.

குடியரசுத் தலைவரின் ஊதியம் ரூ.5 லட்சமாகவும், துணைக் குடியரசுத் தலைவரின் ஊதியம் ரூ.4 லட்சமாகவும் உயர்வு. ஆளுநர்களுக்கான ஊதியம் ரூ.3.5 லட்சமாக உயர்வு.

கிராமப்புறங்களில் 5 லட்சம் இடங்களில் இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும். இந்தியாவில் 124 விமான நிலையங்கள் உள்ளன. இது 5 மடங்காக உயர்த்தப்படும்.

சுகாதார துறை:

காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.500 வழங்கப்படும். காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துக்கு உதவும் வகையில் ரூ.600 கோடி ஒதுக்கீடு. சம்பளத்துடன் கூடிய மகப்பேறு கால விடுமுறை 26 வாரங்களாக அதிகரிப்படும்.

சுகாதார மையங்களுக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு. 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சையை அரசே ஏற்கும். ஏழை குடும்பங்களுக்கு புதிய இலவச மருத்துவ வசதி திட்டத்துக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு. ஒரே நேரத்தில் 10 கோடி குடும்பங்களுக்கு சுகாதார காப்பீடு என்பது மிகப்பெரியது.

முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் சிறு, குறு தொழில்களுக்கு ரூ.4.6 லட்சம் கோடி ஒதுக்கீடு. முத்ரா திட்டத்தின் கீழ் 2018-19ம் நிதியாண்டில் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு.

ரயில்வே துறை:

12.10 அனைத்து ரயில் நிலையங்களிலும் வை-ஃபை வசதி. 3600 கிலோ மீட்டத் தொலைவுக்கு ரயில் பாதைகள் சீரமைக்கப்படும். நாடு முழுவதும் 600 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். 4 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்படும். 25 ஆயிரம் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் அமைக்கப்படும்.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும். ரயில் தண்டவாளங்கள் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்படும்.

கால்நடை, மீன்வளர்ப்புக்கென தனி நிதியம் அமைக்கப்படும். மீன்வளம் மற்றும் கால்நடை நிதியத்துக்கு என தனியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க ஏதுவாக மத்திய அரசு சட்ட திருத்தம் மேற்கொண்டுள்ளது. பழங்குடியினர் குழந்தைகளின் கல்விக்கு என ஏகலவ்யா தனித்திட்டம் தொடங்கப்படும். கல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

விவசாயத் துறை:

விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.22,000 கோடி ஒதுக்கப்படும். இயற்கை முறையிலான விவசாயத்தை மத்திய அரசு ஊக்குவிக்கப்படும்.

ரூ.1,290 கோடி ரூபாயை மூங்கில் கொள்கை வகுக்கப்படும். கால்நடை மற்றும் மீன்வளத்துறைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு. விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

சுங்க வரி உயர்வால் மொபைல் போன்கள், தொலைக்காட்சி உதிரிப்பாகங்களின் விலை 15 சதவீதம் உயர வாய்ப்புள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி