பாலிவுட் ’லுங்கி டான்ஸ்’ பாடலுக்குப் பின்னர் பட்டி தொட்டிகளில் மட்டுமே புழக்கத்திலிருந்த லுங்கிகள் இன்று சர்வதேச ஆன்லைன் விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது.
ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்களைப் போன்று டெக்ஸ்டைல் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ‘ஜாரா’ உள்ளது. இந்த விற்பனை தளத்தில் உலகளவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டு விற்பனையாகியுள்ளது லுங்கிகள். ஒரு லுங்கி அதிகப்பட்சமாக சுமார் ஐந்தாயிரம் ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் மேக்ஸி ஸ்டைல் லுங்கிகள் விற்கப்படுகிறது. நம்மூரில் அதிகப்பட்சம் 50 ரூபாய்க்கு மேல் விற்காத லுங்கிகள் அமெரிக்க, ஐரோப்பா போன்ற நாடுகளில் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் அளவுக்கு பிரபலமடைந்து உள்ளன.
லுங்கி ஸ்டைலின் தீவிர ரசிகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு லுங்கி என பெயர் வைக்குமளவுக்கு லுங்கி பிரியர்கள் வெளிநாடுகளில் அதிகரித்து வருகின்றன. ‘ஜாரா’ ஆன்லைன் விற்பனைப் பக்கத்தில் கலர், சைஸ், டிசைன், பேட்டர்ன் எனப் பல கேட்டகரிகளில் லுங்கி விற்பனை ஜரூராக நடக்கிறது. இனி லுங்கி ஃபேஷனில் வீட்டில் மட்டுமல்ல விசேஷங்களிலும் கலக்கலாம்!