நாங்க ஆட்சிக்கு வந்தா இலவசமாக போன்ல பேசலாம்- மோடி வாக்குறுதி....

phone call will be free-modi

by Subramanian, Apr 8, 2019, 08:26 AM IST

ஆட்சிக்கு வந்தால் விரைவில் தொலைப்பேசி அழைப்புகள் இலவசமாகப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார்.

17வது மக்களவை தேர்தல் வரும் 11ம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. மே 23ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும். அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளனர். தேசிய கட்சியான பா.ஜ. இந்த முறை கொல்கத்தாவில் கணிசனமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரமாக உள்ளது. இதற்காக அந்த கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் அந்த மாநிலத்தில் அடிக்கடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மேற்கு வங்க மாநிலம் கூச்பிகாரில் நடைபெற்ற பா.ஜ.க தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தற்போதைய மத்திய அரசால் ஒவ்வொரு ஏழையும் வங்கி கணக்கு மற்றும் டெபிட் கார்ட் வைத்திருக்கிறார்கள். பெண்கள் சமையல் கியாஸ் இணைப்பை எளிதாக பெறமுடிகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சாத்திய இல்லை என்று கருதப்பட்டவை தற்போது சாத்தியம் ஆக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தொலைப்பேசி அழைப்புகள் இலவசமாக்கப்படும். மேலும் குறைந்த கட்டணத்தில் இணையச்சேவை கொடுக்கப்படும். நாட்டை துண்டாக்க விரும்புபவர்களுடன் மேற்கு முதல்வர் மம்தா பானா்ஜி கூட்டணி வைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.


காங்கிரஸ் கட்சி அண்மையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், மக்களை கவரும் நோக்கத்தில் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம் பெற்று இருந்தது. காங்கிரசின் தோ்தல் வாக்குறுதிகளை மோசடி என்று கூறிய பா.ஜ.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

You'r reading நாங்க ஆட்சிக்கு வந்தா இலவசமாக போன்ல பேசலாம்- மோடி வாக்குறுதி.... Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை