மத்திய பிரதேசத்தின் போபாலை சேர்ந்த 23வயது இளம்பெண் தனது 25வயது கணவன் ஒருவாரத்திற்கும் மேலாக குளிக்காமலும், ஷேவ் செய்யாமலும் இருப்பதால், அவருடன் இனி தான் வாழமாட்டேன் என விவகாரத்து கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த போபால் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஆர்.என். சந்த் தம்பதியினர் இருவரும் 6 மாதத்திற்கு பிரிந்து வாழும்படியும், பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்த காலத்தில் பெண்கள் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கூட விவாகரத்து கோருகின்றனர். ஆனால், உண்மையில் இது சின்ன விஷயமா? போபால் அருகே உள்ள பாரிகார் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணின் கணவன் 7,8 நாட்களுக்கும் மேலாக குளிக்காமலும், ஷேவ் செய்யாமலும் இருந்துள்ளார். அவரை குளிக்க சொன்னால், சென்ட் அடித்துக் கொண்டு நாற்றம் அடிக்கவில்லையே எனக் கூறுகிறாராம். இந்த காரணங்களை கூறி அந்த இளம்பெண் விவாகரத்து கோரியுள்ளார். நீதிமன்றத்தில், இருவரும் விவகாரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் விவாகரத்து கேட்க இது மட்டும் தான் காரணமா? என விசாரித்தால், இவர்கள் விவாகரத்து பெற வேறு பல காரணங்களும் உள்ளன.
கடந்த ஆண்டு தான் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. ஒருவருட காலம் ஆகியும் இன்னும் அந்த பெண் கரு தரிக்கவில்லை. இதனால், மணமகனின் பெற்றோர், அந்த பெண்ணை வெளியே செல்லக் கூடாது என நிர்பந்தித்துள்ளனர். ஆனால், அந்த பெண்ணோ அவர்கள் பேச்சைக் கேட்பதில்லையாம்.
இந்த காரணங்களை விட இருவரும் சாதி கலப்புத் திருமணம் செய்துள்ளனராம். இப்படி இவர்கள் விவாகரத்து கோர பல காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.