`யாரா இருந்தாலும் 150 சீட் தான் - சித்தராமையா கருத்தும்... காங்கிரஸ் ரியாக்சனும்...

wo national parties were in a position to cross the 150 mark out of 543 says Siddaramaiah

by Sasitharan, Apr 15, 2019, 21:41 PM IST

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் தனிப்பட்ட முறையில் பெரும்பான்மை கிடைக்காது என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முதல்கட்ட தேர்தல் வடகிழக்கு மாநிலங்களில் முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட வாக்குபதிவு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 18-ந் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த பிரச்சாரத்தில் அவ்வப்போது சுவாரஸ்ய சம்பவங்களும் சர்ச்சைகளும் ஒருசேர அரங்கேறி வருகின்றன. தலைவர்கள் ஒருவரை ஒருவர் மோசமாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா பேசியது சொந்தக் கட்சிக்குளேயே பலத்த சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. மக்களவை தேர்தல் குறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் இன்று பேட்டியளித்திருந்தார்.

அதில், ``மக்கள், மதவாத, பிரிவினைவாத சக்திகளை புறக்கணிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர். அதிக இடங்களில் வெற்றி பெருவோம் என பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவினரும் கூறிக்கொண்டாலும் யதார்த்தம் வேறுமாதிரியாக உள்ளது. மோடி அலை இந்தத்தேர்தலில் இல்லை. அதற்கு நேர்மாறாக பிரிவினை மற்றும் இனவாத சக்திகளை அகற்ற மக்கள் விரும்புகின்றனர். இதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்க முடியாது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரக் கூடிய எண்ண ஓட்டத்தில் மக்கள் இருக்கின்றனர்.

அதேநேரம் என்னை பொறுத்தவரை இந்த தேர்தலில் இரு பெரும் தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும், 150 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்ற முடியாது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனிப்பட்ட முறையில், பெரும்பான்மை பலத்தைப் பெறும். மாநில கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மையைப் பிடிக்கும். காங்கிரஸ் அதில், அதிக தொகுதிகளை வென்றிருக்கும்" எனக் கூறியுள்ளார். சொந்தக் கட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் சித்தராமையா இப்படி பேசியிருப்பது அவரது கட்சிக்காரர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் உண்மை நிலவரத்தை தானே பேசியுள்ளார் என ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை