இந்தியர்கள் எதற்காகப் பெரிதும் வேதனைப் படுகிறார்கள் என்பது குறித்த சர்வே ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.
சர்வதேச நாடுகளில் வசிக்கும் மக்கள் எதற்காக மிகவும் வேதனைப் படுகிறார்கள் என்பது குறித்து அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. சீனா, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகளில் இந்த சர்வே எடுக்கப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதில், ‘புல்வாமா தாக்குதல், மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் பாலகோட் பகுதியில் கொடுத்த பதிலடி உள்ளிட்ட காரணங்களால் இந்திய மக்கள் பயங்கரவாதம் குறித்து மிகவும் வேதனை கொள்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதை தவிர்த்து பெரிதும் ஆச்சரிய படவேண்டிய விஷயம் என்ன வென்றால், சராசரியாக 73 சதவீத மக்கள், நாட்டில் நிலவும் வேலை இல்லா திண்டாட்டம், அதாவது ‘படித்து முடித்தவுடன் தகுந்த வேலை கிடைக்காமல் வேலையின்மையால் அவதிபடுவமோ என அச்சத்தால், இந்திய மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. அதோடு, அரசியில் ஊழல் மற்றும் நிதி நெருக்கடி குறித்தும் இந்திய மக்கள் வெகுவாக வேதனைப் படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடிமக்கள் மிகவும் பயந்த நிலையில் உள்ள நாடுகளில், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், துருக்கி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களைவைத் தேர்தலையொட்டி, பிரதான அரசியில் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளனர். இந்நிலையில், இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. இந்திய மக்களின் வேதனையைப் போக்க எந்த கட்சிகள் முன்வருகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.