மோடியால் பறிபோனது...50 லட்சம் பேரின் வேலை..! –புதிய ரிப்போர்ட்

by Suganya P, Apr 17, 2019, 00:00 AM IST

கருப்பு பணத்தை ஒழிக்க பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கை பண மதிப்பிழப்பு. இதன் விளைவாக, சுமார் 50 லட்சம் ஆண்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர் என புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 2௦௦0-2010 ஆகிய ஆண்டை விட 2018ல் இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளதாக ‘’State of Working India 2019’’ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் Centre for Sustainable Employment இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இதில், கடந்த 2016ல் பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு காரணமாக 50 லட்சம் பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். மேலும், 2016ம் ஆண்டில் இருந்து வேலையின்மை விகிதம் படிப்படியாக அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு, இதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் 20-24 வயதுக்குப்பட்டோர்தான். இந்த வயதினர் மத்தியில் வேலையின்மை அதிகமாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு மட்டுமல்லாமல், கல்வித் தரம் குறைந்ததாலும் வேலையின்மை அதிகரித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வேலையின்மை காரணமாக, நடுத்தர குடும்பம் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு குடும்பங்களும்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கிராம் புறம், நகர்ப்புற ஆண்கள் எனப் பெண்களும் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, 73 சதவீத மக்கள், நாட்டில் நிலவும் வேலை இல்லா திண்டாட்டம், அதாவது ‘படித்து முடித்தவுடன் தகுந்த வேலை கிடைக்காமல் வேலையின்மையால் அவதிப்படுவோமோ என அச்சத்தால், இந்திய மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக ஆய்வு முடிவு வெளியானது.

 

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்


More India News

அதிகம் படித்தவை