கொளத்தூர் நகைக்கடையில் திருடுப்போன ஒன்றரை கிலோ நகைகள் மீட்பு

by Isaivaani, Feb 3, 2018, 09:17 AM IST

சென்னை: கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் ஒன்றரை கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டனர்.

கொளத்தூர் லட்சுமிபுரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானை சேர்ந்த கொள்ளையர்களால் 3 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதில், தொடர்புடைய பிரபல கொள்ளையன் நாதுராம் மற்றும் கூட்டாளிகளை பிடிக்க சென்போது தான் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொல்லப்பட்டார்.

இதன் பிறகு, நாதுராம், தினேஷ் சவுத்ரி, பக்தாராம் ஆகிய மூன்று பேரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும், நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து நாதுராம் மற்றும் மூன்று பேரிடம் 10 நாள் காவலில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, கொள்ளையடிக்கப்பட்ட 3 கிலோ நகையில், ஒன்றரை கிலோ நகையை சவுகார்பேட்டை என்.எஸ்.சி.போஸ் தெருவில் உள்ள நகை அடகு கடையில் விற்றதாகவும், பெங்களூரிவில் உள்ள அடகு நகை கடை ஒன்றில் ஒரு கிலோ நகைகளை விற்றதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து நகைகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதில், சவுகார்பேட்டையில் உள்ள அடகு கடையில் விற்கப்பட்ட ஒன்றரை கிலோ நகைகளை போலீசார் மீட்டனர்.

மேலும், பெங்களூருவில் விற்கப்பட்ட நகைகளை மீட்க போலீசார் நேற்று முன்தினம் இரவு நாதுராமுடன் பெங்களூருக்கு விரைந்துள்ளனர். நகை கொள்ளை சம்பவத்திற்கும், அடகு கடை உரிமையாளர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

You'r reading கொளத்தூர் நகைக்கடையில் திருடுப்போன ஒன்றரை கிலோ நகைகள் மீட்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை