உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிராக பெண் ஊழியர் கொடுத்த பாலியல் புகார் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. பெண் கொடுத்த புகாரின் பேரில் உச்ச நீதிமன்றமே தாமாக முன் வந்து இந்த வழக்கு விசாரணையை நடத்துகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, அவருடைய அலுவலகத்தில் சில காலம் பணி புரிந்த 35 வயதான பெண் ஊழியர் ஒருவர் கொடுத்த பாலியல் புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரஞ்சன் கோகாய் தமக்கு கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்து ஒட்டுமொத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் புகார் அனுப்பியிருந்தார். இந்தப் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்திருந்த தலைமை் நீதிபதி ரஞ்சன் கோகாய், இது ஒட்டுமொத்த நீதித்துறையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்றும், ஒரு வாரத்தில் அடுத்தடுத்து தாம் பல முக்கிய தீர்ப்புகள் வழங்க உள்ள நிலையில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சம்பந்தப் பட்ட பெண் கொடுத்த புகார் மீது உச்சி நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. நீதிபதி ரோரிங்டன் நாரிமன் தலைமையிலான 3 நீதிபதி கொண்ட அமர்வு இன்று விசாரணையை தொடங்கியது.