உத்தரபிரதேசத்தில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் மாயாவதியின் காலைத் தொட்டு அகிலேஷ் யாதவ் வணங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேசத்தில் சில மாதங்களுக்கு பகுஜன்சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி சேர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டன. அப்போது, எலியும், பூனையுமாக இருந்த இந்த கட்சிகள் கூட்டணி சேரலாமா? தொண்டர்கள் சேரவே மாட்டார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது. காரணம், 1995ல் அரசு விருந்தினர் மாளிகையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், அவரது எம்.எல்.ஏ.க்களும் ஆலோசனை கூட்டம் நடத்திக் கொண்டிருந்த போது சமாஜ்வாடி கட்சியினர் அவர்களை கடுமையாக தாக்கினர்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு இரு கட்சிகளுமே எதிரிகளாக மாறினர். இந்த எதிரிகள் அணி சேர்ந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், இடைத்தேர்தலில் அந்த அணி வென்றது.
இதையடுத்து, மக்களவைத் தேர்தலிலும் அதே கூட்டணி நீடிக்கிறது. இப்போது முன்பை விட நன்றாகவே நெருக்கமாகி விட்டார்கள் இரு அணித் தொண்டர்க டிம்பிள் யாதவ், அதற்கு காரணம், ‘மாயாவதியை யாராவது இழிவாக பேசினால் அது என்னை இழிவுபடுத்துவதாகும்’ என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் ஒரே போடு போட்டதுதான்.
அகிலேஷ் யாதவை மிஞ்சி விட்டார் அவரது மனைவி . ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் இந்த தேர்தலில் கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக மாயாவதி வந்திருந்தார். பொது கூட்ட மேடையில் யாருமே எதிர்பாராதவிதமாக டிம்பிள் யாதவ், மாயாவதியின் காலைத் தொட்டு வணங்கினார். அதைப் பார்த்த பகுஜன் சமாஜ் தொண்டர்களும் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு காணப்பட்டது. கூட்டத்தில் அகிலேஷ் பேசும் போது, இந்த கூட்டணிதான் நாட்டுக்கு பிரதமரை தரப் போகிறது என்றார்.