காலையில் தந்தைக்கு சீட் ... மாலையில் மனைவிக்கு சீட்... சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் அசத்தல்

உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுக்கான சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் தனது தந்தை முலாயமுக்கு சீட் கொடுத்த அகிலேஷ் யாதவ், தொடர்ந்து மாலையில் வெளியிட்ட அடுத்த பட்டியலில் மனைவி டிம்பிள் யாதவ் பெயரை இடம் பெறச் செய்து அறிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி சார்பில் முலாயம் சிங் யாதவ், டிம்பிள் யாதவ் இருவரும் தற்போது எம்.பி.யாக உள்ளனர். கடந்த 2014 தேர்தலில் மெயின் புரி, அசாம்கர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற முலாயம் சிங், மெயின் புரி தொகுதியில் வென்றதை ராஜினாமா செய்தார். நேற்று காலை சமாஜ்வாதி சார்பில் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் மெயின்புரி தொகுதியில் முலாயம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

நேற்று மாலையே 3 தொகுதிகளுக்கான இரண்டாவது பட்டியலையும் அகிலேஷ் வெளியிட்டார். மகளிர் தினத்தில், மகளிருக்கும் சம உரிமை, அதிகாரம் வழங்குவதாகக் கூறிய அகிலேஷ், பட்டியலில் தனது மனைவி டிம்பிள் யாதவ் உள்ளிட்ட 3 பெண்களின் பெயரை இடம் பெறச் செய்திருந்தார். டிம்பிள் யாதவுக்கு தற்போது எம்.பியாக உள்ள கன்னோஜ் தொகுதியே மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது

More India News
p-chidambarams-bail-plea-adjourned-to-18th-oct-supreme-court-in-inx-media-case
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் ஜாமீன் மனு.. அக்.18க்கு ஒத்திவைப்பு
congress-leader-siddaramaiah-met-congress-interim-president-sonia-gandhi-today
சோனியா காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு..
enforcement-directorate-arrests-p-chidambaram-in-inx-media-case
அமலாக்கத் துறை வழக்கிலும் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்..
supreme-court-says-ayodhya-hearing-to-end-at-5-pm-today
அயோத்தி வழக்கு விசாரணை.. மாலை 5 மணிக்கு முடியும்.. சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
madhya-pradesh-roads-will-be-made-smooth-as-hema-malinis-cheeks
ஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் அமைக்கப்படும்.. ம.பி. அமைச்சர் சர்ச்சைப் பேச்சு
rahul-said-pm-diverts-attention-like-pickpocket
பிக்பாக்கெட் போல் திசை திருப்புகிறார்.. மோடி மீது ராகுல் பாய்ச்சல்
west-bengal-governor-jagdeep-dhankar-insulted-at-puja-event
மேற்கு வங்க கவர்னருக்கு அரசு விழாவில் அவமதிப்பு.. மம்தா அரசு மீது குற்றச்சாட்டு..
pm-spotlights-rahuls-foreign-tour-in-haryana-poll-speech
பாங்காக், தாய்லாந்து, வியட்நாம்.. ராகுலை கிண்டலடித்த மோடி..
chidambaram-to-be-questioned-by-ed-tomorrow-in-tihar-free-to-arrest-him-later
அமலாக்கப்பிரிவு வழக்கிலும் கைதாகிறார் ப.சிதம்பரம்? திகார் சிறையில் நாளை விசாரணை
ink-thrown-at-union-minister-ashwini-choubey-outside-patna-medical-college
மத்திய அமைச்சர் மீது இங்க் வீசியவர் ஓட்டம்.. பாட்னா மருத்துவமனையில் பரபரப்பு
Advertisement