ஒரே நாளில் 980 விமானங்கள் இயக்கி மும்பை விமான நிலையம் புதிய சாதனை

by Isaivaani, Feb 5, 2018, 16:49 PM IST

மும்பை விமான நிலையம் கடந்த மாதம் 20ம் தேதி அன்று ஒரே நாளில் 980 விமானங்களை இயக்கி தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.

உலகிலேயே, பரபரப்பாக இயங்கக்கூடிய விமான நிலையங்களில் மும்பை விமான நிலையமும் ஒன்று. இது, ஒற்றை ஓடுபாதையில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. இங்கு, விமானங்கள் அடுத்தடுத்து புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் எப்போதும் தயார் நிலையில் காத்து இருக்கும்.
அதாவது, ஒரு விமானம் தரையிறங்கிய அடுத்த சில நிமிடங்களில் அடுத்த விமானம் புறப்படும். இதுபோன்று விமான போக்குவரத்து இயங்கிக் கொண்டே இருக்கும்.

இதனால், மும்பை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி ஒரே நாளில் 974 விமானங்கள் இயக்கி சாதனை படைத்தது.
இதை முறியடிக்கும் வகையில், கடந்த மாதம் 20ம் தேதி 24 மணி நேரத்தில் 980 விமானங்கள் இயக்கி தனது சொந்த சாதனையை மும்பை விமான நிலையம் முறியடித்துள்ளது.

பயணிகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசியாவிலேயே பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியலில் மும்பை விமான நிலையம் 14வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You'r reading ஒரே நாளில் 980 விமானங்கள் இயக்கி மும்பை விமான நிலையம் புதிய சாதனை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை