பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் தன்மீதான தேசத் துரோக வழக்கை எதிர்கொள்வதற்காக வரும் மே 1ம் தேதி நாடு திரும்புகிறார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீது தேசத் துரோக வழக்கு 2014 ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அதன்பின், அவர் நீதிமன்ற அனுமதியுடன் மருத்துவ சிகிச்சைக்காக 2016ம் ஆண்டு துபாய் சென்றார். பின்னர், அங்கேயே இருந்து விட்டார். இந்நிலையில், அவர் வழக்கை எதிர்கொள்ள கண்டிப்பாக வர வேண்டுமென்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மே 2ம் தேதி முஷாரப் ஆஜராக வேண்டுமென்று சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், முஷாரப்பின் வழக்கறிஞர் சல்மான் ஜப்தார் கூறுகையில், ‘‘முஷாரப் உடல்நிலை மோசமாகவே உள்ளது. துபாயில் அவர் மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வருகிறார். இருந்தாலும் வழக்கை எதிர்கொள்வதற்காக மே 1ம் தேதி அவர் நாடு திரும்புகிறார்’’ என்று தெரிவித்தார்.