டெல்லியைக் கலக்கும் இட்லி, சாம்பார்: வேலை இல்லாப் பட்டதாரிகளுக்கான ஆஸ்தான உணவு

by Rahini A, Feb 6, 2018, 14:27 PM IST

இட்லி, சாம்பார், வடை என்றாலே தமிழ்நாடுதான். ஆனால், தலைநகர் டெல்லியிலும் இன்றைய சூழலில் இட்லி, சாம்பார்தான் ஆஸ்தான உணவாக உருமாறி வருகிறது.

இட்லி

தமிழ்நாட்டு மக்கள் பானிபூரி, பாவ் பாஜி என அவதாரமெடுத்தால் டெல்லி மக்கள் அப்படியே யூ-டர்ன் எடுத்து இட்லி, வடை, சாம்பார் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். ஆமாம் மக்களே. டெல்லியில் உள்ள பிரபலமான ஜந்தர் மந்தர் சாலையில் தென்னிந்திய உணவுக்கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகம்.

சென்னைக்கு ஒரு சவுகார்பேட்டையைப் போல டெல்லிக்கு ஜந்தர் மந்தர் சாலை. விலை குறைவு, ஆரோக்கியம் அதிகம் எனப் பர்ஸுக்கும், ஹெல்த்துக்கும் நிறைய ப்ளஸ் இருப்பதால் டெல்லிக்காரர்கள் தென்னிந்திய உணவுகள் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக இட்லி- சாம்பாருக்கு அடுத்து மைசூர் தோசைக்கும் அதிகக் கூட்டம் வருகிறதாம். ஆனால், இங்கு பானிபூர் கடை வைத்திருக்கும் ‘பய்யா’தான் அங்கேயும் இட்லி, தோசைக் கடை வைத்திருக்கிறார்களாம். தமிழர்கள் கடை அவ்வளவுக்கு இல்லையாம். ஹிந்தி ‘பய்யா’ கடையிலேயே அந்த ருசிக்கு அவ்வளவு கூட்டமென்றால் நம்மூர் அய்யா கடை வைத்தால் கல்லாப்பெட்டியின் கணத்தை நீங்களே யோசித்துக்கொள்ளலாம்.

You'r reading டெல்லியைக் கலக்கும் இட்லி, சாம்பார்: வேலை இல்லாப் பட்டதாரிகளுக்கான ஆஸ்தான உணவு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை