நக்சலைட் தாக்குதலில் வீரர்கள் 15 பேர் பலி பிரதமர் மோடி கண்டனம்!

மகாராஷ்டிராவில் நக்சலைட் தீவிரவாதிகள் புதனன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் 15 அதிரடிப்படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிகாலையில், தனியார் சாலை ஒப்பந்ததாரர் நிறுவனத்துக்கு சொந்தமான 25 வாகனங்களுக்கு தீவைத்து கொளுத்தினர்.

அதன்பின்னர், நக்சலைட்களை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படை வீரர்கள் சென்ற போலீஸ் வாகனத்தின் மீது வெடி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 15 வீரர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கூடுதலாக அதிரடிப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிரடிப்படையினர் நக்சலைட் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, ஓரிடத்தில் அதிடிரப் படையினருக்கும். நக்சலைட்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

மகாராஷ்டிரா டி.ஜி.பி. சுபோத் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘இந்த தாக்குதலுக்கு உளவுத் துறையின் தோல்வியே காரணம் என்று கூற முடியாது. தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறோம்’’ என்றார்.

இந்நிலையில், நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ‘‘வீரர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன். உயிரிழந்த வீரர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். வீரர்களின் தியாகம் ஒரு போதும் மறக்கப்பட மாட்டாது. தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பவே முடியாது’’ என கூறி உள்ளார். இதே போல், குடியரசு துணை தலைவர் வெங்கய்யநாயுடு உள்பட பலரும் தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக, மகாராஷ்டிர முதல்வர் பட்நாவிஸ், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் விவரித்தார்.

தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து தற்கொலை

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்