மோடி வெறும் முகமூடி தானா...? கிழிந்தது திரை... கலக்கத்தில் பாஜக!

Loksabha election, article about pm modi on TIME shows his original face and damage his image

by Nagaraj, May 11, 2019, 10:57 AM IST

5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஏதோ பெரிய சாதனைகளைப் படைத்து விட்டதாக உரக்க கோஷமிட்ட மோடியின் உண்மை முகம் இந்தத் தேர்தலில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிற ஆரம்பித்து கடைசியில் எல்லாமே வெத்து வேட்டு என்ற நிலைக்கு வந்து அம்பலப்பட்டுவிட்டது. இதனால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் மோடியின் குரலில் இருந்த கம்பீரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்போது சுரத்தின்றி போய்விட்டது.எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பிரதமர் மோடி, இப்போது கையில் எடுக்கும் ஆயுதங்கள் எல்லாம் பூமராங் போல அவர் பக்கமே திரும்பி தாக்குதல் தொடுக்கிறது.

போதாக்குறைக்கு இன்னும் 2 கட்ட தேர்தல், அதுவும் டெல்லி, அரியானா, ம.பி, இமாச்சல் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடியின் உண்மையான முகம் இதுதான் என்று உலகின் பிரபல 'டைம்' இதழ் தோலுரித்து காட்டி விட்டது. உலகின் மிகப் பெரிய சக்தியாக திகழ்வார் என்று 2014-ல் போற்றிப் பாராட்டிய டைம் இதழ், இப்போது மோடியை, நாட்டைப் பிளவுபடுத்தும் சக்திகளின் தலைவர் என்ற பட்டம் சூட்டி பாஜகவை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது. இதனால் பாஜக தரப்பு விழி பிதுங்கியுள்ளது என்பது தான் நிஜமான உண்மை.

2014 பொதுத் தேர்தலின் போது, அதற்கு முன்னர் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீது மக்களுக்கு ஒரு வித சலிப்பும், அவநம்பிக்கையும் காணப்பட்டது. அப்போது குஜராத்தில் இருந்து முன்னிறுத்தப்பட்ட மோடியின் மாயாஜால வித்தையில் நாட்டு மக்கள் மயங்கி விட்டனர். அப்போது பாஜகவுக்கு சாதகமாக வீசியமோடி அலை, அக் கட்சியை தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் அரியணையில் அமரச் செய்தது.

ஆட்சியில் அமர்ந்தது தான் தாமதம், மோடியின் சுயரூபம் வெளிப்படத் தொடங்கி விட்டது. கூடவே பாஜகவின் இந்துத்வாக் கொள்கைகளும் நாட்டு மக்கள் மீது திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மோடியின் பொருளாதாரக் கொள்கைகளும் பெரும் கார்ப்ரேட்களுக்கு சாதகமாக்கப்பட்டு, சுரண்டலுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி திணிப்பு போன்றவை மக்களையும், எளிய வியாபாரிகளையும் கசக்கிப் பிழிந்தாலும், சட்டை செய்யாமல் தன் போக்கில் பயணித்தார் மோடி.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை எல்லாம் வெற்றுக் கோஷங்களால் அடக்கப் பார்த்தார். துணைக்கு வருமான வரி, சிபிஐ, அமலாக்கத்துறையையும் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை திணறடித்தார். வட மாநிலங்களில் இந்துத்வா கோஷம் உச்சக்கட்டத்தை எட்டி பிற சமூகத்தை கிடு கிடுக்கச் செய்து விட்டது.இதையெல்லாம் மக்கள் ஊமையாக வேடிக்கை பார்க்கும் அளவுக்கு சர்வாதிகாரியாக வே செயல்பட ஆரம்பித்தார் மோடி. ஆனால் ஊமையாக பார்த்த மக்கள் உள்ளுக்குள் குமுறலை வைத்து தங்கள் ஜனநாயகக் கடமையாம் வாக்குரிமையில் காட்டத் தொடங்கியுள்ளனர் என்பது இப்போது வெளிப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்று சேரவிடாமல் பாஜக கையாண்ட சூழ்ச்சி, பாகிஸ்தான் மீதான ராணுவ தாக்குதலை சாதகமாக்கப் பார்த்தது என எதுவுமே தென் மாநிலங்களில் நடந்த முதல் 3 கட்டங்களில் நடந்த தேர்தலில் எடுபடாமல் பாதகமாக போய்விட்டது. இதை அப்பட்டமாக உணர்ந்த மோடி, வடமாநிலங்களில் அடுத்தடுத்த கட்டமாக நடந்து வரும் தேர்தலில் தனிநபர் தாக்குதல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். ராகுல் காந்தியை விடுத்து திடீரென ராஜீவ் காந்தியை நம்பர் 1 ஊழல்வாதி என்றது, மே.வங்க முதல்வர் மம்தா, உ.பி.யில் மாயாவதி - அகிலேஷ் கூட்டணி மீது வைத்த விமர்சனங்கள் எதுவும் எடுபடவில்லை என்றாலும், பாஜகவுக்கு எதிராகவே திரும்பி, மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா? என்ற சந்தேகம் அக்கட்சியினருக்கே வந்து பதற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது.

இந்நிலையில் தான் உலகின் நெ.1 இதழான அமெரிக்காவின் 'டைம்' இதழ் டைமிங்காக பிரதமர் மோடியை நாட்டின் பிளவுவாத சக்திகளின் தலைவன் என்ற பட்டத்தை சூட்டி, மோடியின் முகமூடியை கிழித்து, இதுதான் உண்மையான முகம் என்று வெளிச்சம் போட்டு காட்டி விட்டது. மோடிக்கு எதிரான இந்த விமர்சனம் இன்னும் நடக்க உள்ள 2 கட்டத் தேர்தலில், அதுவும் கடந்த தேர்தலில் பாஜகவுக்கு வெற்றிகளை அள்ளிக் கொடுத்த இந்தி பேசும் மாநிலங்களான டெல்லி, அரியானா, இமாச்சல், ம.பி, உ.பி மாநிலங்களில் மேலும் சரிவை உண்டாக்கப் போகிறது என்ற பீதியில் பாஜகவினர் உள்ளனர் என்பது தான் நிதர்சனமான உண்மை.

ராஜீவ் ஊழல்வாதியா? - மோடி கூறியது அதிர்ச்சி..! ராகுலின் 'நறுக்' பதில் ஓ.கே..! மகாத்மாவின் பேரன் கருத்து!

You'r reading மோடி வெறும் முகமூடி தானா...? கிழிந்தது திரை... கலக்கத்தில் பாஜக! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை