அந்துபோச்சு.. கெளம்பு.. கெளம்பு.. டெல்லி அணியை துவம்சம் செய்து ஃபைனலுக்கு சென்றது சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது குவாலிஃபையர் மேட்சில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் டெல்லி அணியை பேட்டிங் செய்ய பணித்தது. சென்னை அணியின் நேர்த்தியான பந்துவீச்சில் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான டூப்ளசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் இன்று அதிசயமாக அபாரமாக ஆடி இருவரும் அரைசதம் அடித்த நிலையில் அவுட் ஆகினர்.

இதனால், சென்னை அணியின் வெற்றி பிரகாசமானது. அடுத்து வந்த ரெய்னா, மற்றும் தோனி சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். அம்பத்தி ராயுடு 20 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

ஃபினிஷிங் ஷாட் அடிக்க நினைத்த தோனி அடித்த பந்து கேட்ச் ஆக தோனி கடைசி நேரத்தில் அவுட் ஆனது, அவருடைய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை உண்டு பண்ணியது.

19 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தோற்றதன் மூலம் இந்தாண்டும் டெல்லி அணியால் கோப்பையை கைப்பற்றும் கனவு பலிக்காமல் போனது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மூன்று முறை மும்பை அணியிடம் தோல்வியைத் தழுவிய சென்னை அணி இறுதிப் போட்டியில் அதற்கு பழி வாங்கி கோப்பையை வெல்லுமா? என்பதை வரும் ஞாயிறன்று நடக்கும் இறுதிப்போட்டியில் கண்டு மகிழுங்கள்!

More Sports News
dhoni-rishab-pant-comparison-is-a-worst-thing-says-yuvaraj-singh
தோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடக்கூடாது – யுவராஜ் சிங் நச்!
south-africa-won-the-3rd-t20-match-against-india
பெங்களூரில் டிகாக் தாண்டவம் – சமனில் முடிந்த டி-20 தொடர்!
kohli-beat-rohit-sharma-in-t20-top-scorer
டி-20 கிரிக்கெட்: ரோகித்தை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடம்!
vineshphogat-selected-to-play-in-olympics
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ரியல் தங்கல் நாயகி!
ashes-test-cricket-ended-in-tie
ஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்!
dhoni-will-continue-as-csk-captain-next-ipl-also
அடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி!
stewsmith-breaks-world-record
இன்சமாம் உல் அக்கின் உலகசாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
india-pakistan-play-davis-cup-tennis-this-year-end
டேவிஸ் கோப்பை: பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா!
fifa-u17-female-worldcup-held-next-year-in-india
இந்த வருஷம் இல்ல அடுத்த வருஷம் தான் ரியல் பிகில் ஆரம்பம்!
david-warner-poor-play-in-ashes-test
இந்தியாவில் அசத்திய வார்னருக்கு இங்கிலாந்தில் இப்படியொரு கதியா?
Advertisement