ஆர்.டி.ஜி.எஸ். நேரம் நீட்டிப்பு ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Real Time Gross Settlement (RTGS) System – Extension of Timings for Customer Transactions

by எஸ். எம். கணபதி, May 28, 2019, 21:03 PM IST

வங்கிகளில் ஆர்.டி.ஜி.எஸ். முறையில் பணம் அனுப்பும் நேரத்தை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒரு வங்கிக் கணக்கில் இன்னொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை ஆன்லைனில் அனுப்பலாம். குறைந்த பணம் அனுப்ப வேண்டுமெனில் என்.இ.எப்.டி(நேஷனல் எலக்ட்ரானிக் பண்ட் டிரான்ஸ்பர்) முறையில் அனுப்பலாம். 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக அனுப்பும் போது ஆர்.டி.ஜி.எஸ்(ரியல்டைம் கிராஸ் செட்டில்மென்ட்ஸ்) முறையில் அனுப்பலாம்.

தற்போது ஆர்.டி.ஜி.எஸ் சேவை காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. இதை ஜூன் 1ம் தேதி முதல் மாலை 6 மணி வரை நீட்டிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. எனவே, இனிமேல் வங்கிகளில் ஆர்.டி.ஜி.எஸ் முறையில் பணத்தை அனுப்ப மாலை 6 மணி வரை வங்கிக்கு செல்லலாம்.

You'r reading ஆர்.டி.ஜி.எஸ். நேரம் நீட்டிப்பு ரிசர்வ் வங்கி அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை