ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையில் ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளில் வீட்டுகடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் காலாண்டு நிதிக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், ரெப்போ என அழைக்கப்படும்,வர்த்தக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை 6 சதவீதம் என்பதில் இருந்து 5.75 சதவீதமாக குறைத்துள்ளது. இதே ேீபால், வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் சேமிப்புபணத்திற்கான வட்டியை 5.75 சதவீதத்தில் இருந்து 5.5 சதவீதமாக குறைத்திருக்கிறது.
ரெப்போ விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதால், வங்கிகளுக்கு பெரும் தொகை கிடைக்கும். இதனால், வங்கிகள் புதிய கடன்களுக்கான வட்டிவிகிதத்தை குறைக்கும். அதேபோல், ஏற்கனவே உள்ள வீட்டுக்கடன், வாகனக் கடன் ஆகியவற்றிற்கான கடன் விகிதத்தையும் வங்கிகள் குறைப்பதற்கு வாய்ப்புள்ளது.
பா.ஜ.க. அரசு மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் வட்டிக்குறைப்பு நடவடிக்கை தொழில்வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார மந்தநிலையைப் போக்குவதற்காக ஏற்கனவே தொடர்ச்சியாக 2 முறை ரெப்ேபா விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.