மத்திய அரசு புதிய திட்டம்..! சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பள்ளிக்கல்வியை நிறைவு செய்யும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, அனைவருக்கும் வாய்ப்பு, அனைவருக்கும் வளர்ச்சி என்ற குறிக்கோளுடன் மத்திய அரசு செயல்படுவதாக கூறினார்.
குறிப்பாக சிறுபான்மையின மாணவிகள் பள்ளிக்கல்வியை கூட முழுமையாக முடிக்காத நிலை இருப்பதால், இதனை மாற்றும் வகையில் இந்த உதவித்தொகை திட்டத்தை கொண்டு வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். கல்வி உதவித் தொகை திட்டத்தில் 50% பேர் மாணவிகளாக இருப்பர் என்றும் நக்வி தெரிவித்துள்ளார்.
இதேபோல், ரயில்வே, வங்கி, மற்றும் மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் வகையில், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், சமண மதத்தினர் ஆகியோருக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.