கஞ்சா பயன்பாட்டை அனுமதிக்க வேண்டும்: பாபா ராம்தேவ் கோரிக்கை

by Rahini A, Feb 10, 2018, 12:59 PM IST

"கஞ்சா பயன்பாட்டை இந்தியாவில் சட்டப்படி அனுமதிக்க வேண்டும்" என பாபா ராம்தேவ் ஒரு அதிரடியானப் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஆயுர்வேதப் பொருள்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கையுடன் களம் இறங்கியதாகக் கூறப்படும் பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' நிறுவனம் தற்போது புதியதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதன்படி கஞ்சா பயன்படுத்த இந்திய அரசு அனுமதி அளிக்க வேண்டுமென 'பதஞ்சலி' பாபா ராம்தேவ் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ் கூறுகையில், "க்ஞ்சாவில் பல ஆயுர்வேத மருத்துவ குணநலன்கள் உள்ளன. வேதங்களிலும் இதன் மூலிகைப் பயன்பாடு குறித்துக் கூறப்பட்டுள்ளது. மருத்துவ பயன்பாட்டுக்கு என்றாவது இதன் பயன்பாட்டை அனுமதிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

You'r reading கஞ்சா பயன்பாட்டை அனுமதிக்க வேண்டும்: பாபா ராம்தேவ் கோரிக்கை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை