தலைநகர் டெல்லியை அடுத்துள்ள ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க உலகம் முழுவதும் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
ஒரு முறை டிக்கெட் வாங்கினால், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தாஜ்மகாலை சுற்றிப்பார்த்து உள்ளேயே இருக்க முடியும். இந்நிலையில் அந்த நடைமுறையை மாற்றி தொல்லியல் ஒரு புதிய கட்டுப்பாட்டை கொண்டு வர இருக்கிறது. அடுத்த மாதம் முதல், ஒருவர் தாஜ்மகாலை சுற்றிபார்க்க வேண்டும் என்றால் 3 மணி நேரம் மட்டும் தான் அனுமதி.
அதற்கு மேலும் பார்வையாளர்கள் தாஜ்மகாலுக்குள் இருந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தொல்லியல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தாஜ்மகாலை காண இந்தியர்களுக்கு ரூ. 200, சார்க் நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு ரூ.450, மற்ற வெளிநாட்டினருக்கு ரூ.1,100 -ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தாஜ்மகாலில் குவியும் கூட்டத்தை குறைக்கும் நோக்கில் இந்த புதிய கட்டண நடைமுறையை கொண்டு வருவதாக தொல்லியல் துறை விளக்கம் அளித்துள்ளது.
- தமிழ்