தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்..! கேரளாவில் நடந்த நெகிழ்வான நிகழ்வு..!

23 years Kerala young boy reform

Jun 13, 2019, 16:30 PM IST

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 23 வயது இளைஞர் தனது தாய்க்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். மறுமணத்தை குற்றமாக கருதும் இந்தச் சமூகத்தில், அந்த இளைஞரின் செயல் கேரளாவில் கொண்டாடி தீர்க்கப்படுகிறது.

அரசுப்பள்ளி ஆசிரியரான மினி தனது முதல் கணவரால் கடும் சித்ரவதைக்கு ஆளானதால் அவரை விவாகரத்து செய்துவிட்டு ஒற்றை மனுஷியாக தனது மகனை வளர்த்து பொறியியல் படிக்க வைத்தார். தாயின் தியாகத்தை எண்ணி அவருக்கு அன்பு பரிசு தர விரும்பிய மகன் கோகுல், உறவினர்கள், நண்பர்கள் உதவியுடன் முன்னாள் ராணுவ வீரர் வேணுவுக்கு திருமணம் செய்து வைத்தார்.

இது தொடர்பாக கோகுல் தனது முகநூலில் பதிவிட்டுள்ள செய்தியில், எனத்கு தாயின் திருமண வாழ்க்கை கசப்பானதாக இருந்தது. இதுவரை எனக்காக வாழ்ந்த என் தாயை இனி அவருக்காக வாழவைக்க வேண்டும் என எண்ணி இந்த திருமணத்தை செய்து வைத்தேன் எனக் கூறியுள்ளார். மேலும், மறுமணத்தை பாவச்செயல் எனக் கருதும் பலர் இந்த நவீன காகத்திலும் உள்ளனர். அதனால் இது பற்றி பொதுவெளியில் கூற முதலில் பல முறை யோசித்தேன். எனது தாயாரும் மறுமணத்துக்கு உடனடியாக சம்மதம் தெரிவிக்கவில்லை. நான் மற்றும் எனது உறவினர்கள் சேர்ந்து அவரை சம்மதிக்க வைத்தோம்.

இப்போது நான் நிம்மதியான மன உணர்வை அடைகிறேன் எனக் கூறியுள்ளார் கோகுல். கோகுலுக்கு இடதுசாரி அமைப்பினர் பாராட்டு விழா எடுக்காத குறையாக அவரை கொண்டாடுகின்றனர். 

You'r reading தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்..! கேரளாவில் நடந்த நெகிழ்வான நிகழ்வு..! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை