ரயில்வேயில் ஒரு லட்சம் பேருக்கு உடனடி வேலை

Feb 12, 2018, 18:14 PM IST

ரயில்வேயில் ஒரு லட்சம் பேருக்கு உடனடியாக வேலை வழங்கப்படும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் முடிந்த நிலையில், அவர்களது சாதனை பட்டியலில் வேலைவாய்ப்புக்கான எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதோடு, புதிய பணியிடங்களையும் உருவாக்கி வேலைவாய்ப்பு வழங்க மோடி அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது ரயில்வே துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதில், குரூப்டி- பிரிவில் 63 ஆயிரம் பேரும், லோகோ பைலட், தொழில்நுட்ப பிரிவில் 26 ஆயிரம் பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரயில்வே தேர்வு வாரியம் மூலம் இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

இதற்கான அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில், குரூப்&டி பிரிவுக்கு அடுத்த மாதம் 12ம் தேதி வரையும், லோகோ பைலட் பணி இடங்களுக்கு அடுத்த மாதம் 5ம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை முதல் தேர்வு வரை அனைத்தும் ஆன்லைனில் நடைபெறும். வரும் மே மாதத்திற்குள் ஒரு லட்சம் பேரையும் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

You'r reading ரயில்வேயில் ஒரு லட்சம் பேருக்கு உடனடி வேலை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை