"காஷ்மிரில் பாகிஸ்தான் நடத்தியத் தாக்குதலுக்கு அந்நாடு பதில் சொல்லியே ஆக வேண்டும்" என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள காஷ்மீர் மாநிலத்தின் சுன்ஜுவான் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் ராணுவ முகாமைச் சேர்ந்த ஐந்து ராணுவ வீரர்களும் பொதுமக்களில் ஒருவரும் பலியாகினர். மேலும் பெண்கள், குழந்தைகள் உள்பட பத்து பேர் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் ராணுவப் பாதுகாப்பில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்தி நலம் விசாரிக்க வந்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதன் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அனுபவித்தே ஆக வேண்டும். இந்த இழப்புகளுக்குக் கூடிய விரைவில் பாகிஸ்தான் பதில் சொல்லும் காலம் வரும்" என்றார்.