தமிழக விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென போராட்டம் நடத்தி வரும் வேளையில், கர்நாடக விவசாயிகளின் 8,176 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக சட்டமன்றத்தில் முதல்வர் சித்தராமையா கூறுகையில், "விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தருணத்தில் அவர்களின் கடன்களை கடும் நிதி நெருக்கடிக்கிடையிலும் தள்ளுபடி செய்திருக்கிறோம்" என்றார்.
கர்நாடகாவில் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியுள்ள 22 லட்சத்து 27 ஆயிரம் விவசாயிகளின் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 50 ஆயிரம் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் ரூ.8.176 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்தியாவின் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்த மூன்றாவது மாநிலம் கர்நாடகா. ஏற்கனவே மகராஸ்ட்ரா, பஞ்சாப் மாநிலங்கள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கின்றன.