ராணுவ கண்காணிப்பல் பயிற்சி பெற்ற 9 காஷ்மீர் மாணவர்கள் ஐஐடி-க்கு தேர்ச்சி

ராணுவ மாணவர்கள் ஐஐடி-க்கு தேர்ச்சி

Jun 14, 2017, 19:27 PM IST

ராணுவ கண்காணிப்பல் பயிற்சி பெற்ற 9 காஷ்மீர் மாணவர்கள் ஐஐடி-க்கு தேர்ச்சி

ராணுவம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த 9 மாணவர்கள் ஐஐடி நுழைவுத் தேர்வு JEE பாஸ் செய்துள்ளனர்.

'காஷ்மீர் சூப்பர் -40' என்ற பெயரில் இந்திய ராணுவம் சார்பில் காஷ்மீர் மாணவர்களுக்கு கடந்த 2013ம் ஆண்டு முதல்  JEE நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு 24 மாணவ -மாணவிகள் JEE நுழைவுத்  தேர்வு எழுதினர். இதில், 9 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில், 9 பேர் தேர்ச்சி பெறுவது இதுவே முதன்முறை. இந்தத் திட்டத்தின்படி காஷ்மீரில் இருந்து 40 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தங்குவதற்கு உறைவிடம், உணவு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

வெற்றி பற்ற மாணவர்களுக்கு ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் வாழ்த்து தெரிவித்துள்ளார். 'வன்முறை , வெடிச் சத்தத்துக்கிடையே வெற்றி பெற்றுள்ள இந்த மாணவர்கள் வாழ்க்கையில் சாதிக்க ராணுவம் எல்லாவிதத்திலும் துணை நிற்கும்' என்று அவர் கூறியுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் ராணுவம் அளித்த பயிற்சி வழியாக 28 பேர் ஐஐடிக்குத் தேர்ச்சி பெற்றிருக்கன்றனர். இதில் இரண்டு பேர் மாணவிகள். அடுத்த ஆண்டு முதல் பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 50-ஆக அதிகரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.

You'r reading ராணுவ கண்காணிப்பல் பயிற்சி பெற்ற 9 காஷ்மீர் மாணவர்கள் ஐஐடி-க்கு தேர்ச்சி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை