அதிக வசூல் உலகளவில் 'தங்கல் ' படத்துக்கு ஐந்தாவது இடம்!
உலகளவில் ஆங்கிலப் படங்களைத் தவிர்த்து வசூலில் 'தங்கல் ' இந்தி படம் 5வது இடம் பிடித்துள்ளது.
அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் ' இந்தி படம் இந்தியா மட்டுமல்லாமல் சீனா உள்ளிட்ட பிற நாடுகளிலும் சக்கைப் போடு போட்டது. தற்போது, இந்த படம் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 1,920 கோடி ஆகும். உலகத் திரைப்பட வரலாற்றில் ஆங்கிலப்படங்களைத் தவிர்த்து அதிக வசூலைக் குவித்த படங்கள் வரிசையில் தங்கல் படத்துக்கு 5வது இடம். .
இதற்கு முன், சீனத் தயாரிப்பான 'தி மெர்மெயிட்' 533 மில்லியன் , 'மான்செர் ஹன்ட் ' 386 மில்லியன், பிரான்ஸ் நாட்டின் ' தி இன்டச்சபிள்ஸ்' 427 மில்லியன் டாலர்களையும் ஜப்பான் தாயரிப்பான 'யூவர் நேம்' 354 மில்லியன் டாலர்களையும் வசூலித்துள்ள ஆங்கிலம் அல்லாத திரைப்படங்கள். வெளிநாடுகளில் 100 மில்லியன் டாலர்களுக்கு மேல் வசூலித்துள்ள முதல் இந்திய திரைப்படம் 'டங்கல்' மட்டும்தான்.