பாரதிய ஜனதா அலுவலகம் தாக்கப்படுவதற்கு முன்னரே ஃபேஸ்புக்கில் கண்டனம்
திருவனந்தபுரம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை தாக்குவதற்கு முன்னதாகவே , தாக்குதலைக் கண்டித்து ஃபேஸ்புக்கில் கண்டனம் வெளியிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. கடந்த 7ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. அன்றைய தினத்தில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாகவே அந்த சம்வத்தைக் கண்டிப்பதாக கேரள பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ஜெயவேலு ஹாரிஸ் நாயர் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 3 பதிவுகளை வெளியிட்டுளளார்.
கடந்த 7ம் தேதி காலை 8.01,50.01, 6.31 மணி என மூன்று பதிவுகள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டள்ளது. ஆனால் சம்பவம் நடந்ததோ இரவு 8.30 மணி முதல் 9 மணிக்குள். இதனால், வெடிகுண்டு வீச்சு சம்பவம் திட்டமிட்ட நிகழ்த்தப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியினர் திட்டமிட்டு இந்த செயலை நிகழ்த்தி விட்டு தங்கள் மீது குற்றஞ்சாட்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. வெடிகுண்டு சம்பவம் நிகழ்வற்கு முன்னரே, எப்படி கண்டனம் தெரிவித்து ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பதிவிட முடியும் என நெட்டிஸன்கள் ஜெயவேலுவை ட்ரோல் செய்து வருகின்றனர். தங்கள் கட்சி அலுவலகம் மீது தாககுதல் நடந்தப்பட்டதைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி பந்த் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.