Advertisement

கமல் ஏன் உலகநாயகன் ஆனார்... இந்த போலந்து சிறுவனே சாட்சி!

கமல் ஏன் உலகநாயகன் ஆனார்... இந்த போலந்து சிறுவனே சாட்சி!

போலந்து நாட்டைச் சேர்ந்த எட்டு வயதே நிரம்பிய சிறுவன் zbigniew உலகநாயகன் கமலஹாசனின் தீவிர ரசிகர். சிறுவயதிலேயே, அவரது படங்களைப் பார்த்து பார்த்து பாடல்களை பாடக் கற்றுக் கொண்டிருக்கிறான். கடந்த 1980ம் ஆண்டு, கமலஹாசன் நடித்த தெலுங்குப் படமான 'சாகரசங்கம்' படத்தில் இடம் பெற்றிருந்த' தகிட ததிமி தந்தானா பாடலை பாடி, அதனை ட்வீட்டரில் பதிவு செய்திருந்தான். 'இந்த ட்விட் உங்களை (கமல்) அடைந்தால், எனக்கு பதிலிடுங்கள். உங்கள் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. நான் இந்தப் பாடலை பாட முயற்சிசெய்துள்ளேன்' என்று பதிவு செய்திருந்தார். ட்வீட்டைப் பார்த்த கமல்,, இந்தப் பாடலைத் தெலுங்கில் எத்தனையோ சிறுவர்கள் பாடியுள்ளனர். ஆனால், நீ பாடியது ஸ்பெஷல். இந்தப் பாடலைப் பாடியதற்கு நன்றி என நெகிழ்ந்துள்ளார்.

அந்த சிறுவனின் ட்வீட்டர் பாக்கத்தில் சென்றுப் பார்த்தால், 'நான் போலந்தைச் சேர்ந்தவன், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறேன். நடிப்பும் பாடல்களும் எனக்கு பிடித்த விஷயங்கள். போலந்தும் இந்தியாவும் எனக்குப் பிடித்த நாடுகள் எனச் சொல்லப்பட்டிருந்தது. சிறுவன் பாடிய பாடல் தற்போது ஆன்லைனில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் இருந்து zbigniew-க்கு வாழ்த்துகள் குவிகிறது. இதையடுத்து சென்னையில் இருந்தும் வாழ்த்து குவிந்து வருகிறது. இதையடுத்து, 'நன்றி சென்னை.... அடிமனதில் இருந்து நன்றி தெரிவிக்கிறேன்.' வருங்காலத்தில் நீ நடிகராக உருவானால், கமல்ஹாசன் போல நடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் 'என எனது தந்தை கூறியிருக்கிறால். இந்தியாவிலேயே அழகுமிகுந்தவர்கள் இசையை நேசிக்கும் தமிழர்கள்' என பதிவிட்டுள்ளான்.

உலக நாயகனே கண்டங்கள் கண்டு வியக்கும்... என்கிற தசவாரப் படப் பாடல் உண்மையாகிக் போனதுதான் ஆச்சரியம்!

மேலும் படிக்க
29-years-of-marriage-no-children-but-this-is-the-ideal-couple-says-malayalam-director
திருமணம் முடிந்து 29 ஆண்டுகள், குழந்தை இல்லை... ஆனால், இவர்கள்தான் ஆதர்ஷ தம்பதி - மலையாள இயக்குநர் சொல்கிறார்
for-director-shankar-the-pleasure-of-stealing-is-what-matters-writer-arnika-nassar-kattam
இயக்குநர் சங்கருக்கு திருடும் புணர்ச்சி சுகம்தான் முக்கியம் - எழுத்தாளர் ஆர்னிகா நாசர் காட்டம்.
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!