ஆந்திராவில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பரிதாப சாவு.. 35 பேரை தேடும் பணி தீவிரம்

ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இது வரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மேலும், ஆற்றில் மாயமான 35 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆந்திராவில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் படகு சுற்றுலா பிரபலமானது. கோதாவரி ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்ததால், படகுகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. நேற்று ஆற்றில் தண்ணீர் குறைந்தாலும் படகுகளை இயக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அப்படியிருந்தும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், படகு சுற்றுலாவுக்கு அதிகமான பயணிகள் வந்திருந்தனர். இதனால், சில படகுகள் இயக்கப்பட்டிருக்கின்றன. அதே சமயம், அந்தப் படகுகள் குறிப்பிட்ட தூரம் வரைதான் சென்று வந்தன. ஒரு படகு மட்டும் கண்டி போச்சம்மா கோயிலை சுற்றிப் பார்த்த பயணிகளை திருப்பி அழைத்து வராமல், அங்கிருந்து பப்பிகொண்டலு என்ற சுற்றுலா தலத்திற்கு அழைத்து சென்றுள்ளது. அப்போது கோதாவரி ஆற்றில் வினாடிக்கு 5 லட்சம் கன அடி நீர் வெளியேறிக் கொண்டிருந்தது.

அந்த படகு குச்சலூருமண்டா என்ற கிராமத்திற்கு அருகே ஆற்றில் செல்லும் போது நீர்ச்சுழலில் சிக்கி திடீரென கவிழ்ந்தது. படகில் அதை இயக்குபவர்கள் 72 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. படகு கவிழ்ந்ததும் அனைவரும் நீரில் மூழ்கினர். அவர்களை படகு இயக்குபவர்கள் காப்பாற்ற முயன்றனர். இதற்கிடையே, குச்சலூருமண்டா கிராமத்தினர், மீனவர்களை அழைத்து வந்து ஆற்றில் குதித்து மீட்பு பணியில் ஈடுபடத் தொடங்கினர்.

தகவலறிந்து ராஜமுந்திரி நகராட்சி ஆணையர் முரளிதர்ரெட்டி, ஹெலிகாப்டரில் வந்தார். கடற்படை ஹெலிகாப்டர்கள், மீட்பு படகுகள் வரவழைக்கப்பட்டன. ஆந்திர துணை முதல்வர் அல்லகல்லி கிருஷ்ணா சீனிவாஸ், அமைச்சர் கன்னபாபு, கோதாவரி மாவட்ட கலெக்டர் சுமித்குமார் காந்தி என்று பலரும் அந்த பகுதிக்கு வந்து மீட்பு பணிகளை கவனித்தனர்.

இது வரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 35 பேரை தேடும் பணி இன்றும்(செப்.16) 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி அளிக்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களில் பலரும் தெலங்கானா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

More India News
no-one-in-government-seems-to-have-felt-a-pang-of-guilt-about-abijit-comment
நோபல் பரிசு வென்றவரின் கருத்து.. மத்திய அரசு கவலைப்படவில்லை.. சிதம்பரம் ட்விட்டரில் கமென்ட்
maharashtra-hit-by-grave-economic-slowdown-says-former-pm-manmohan-singh
பொருளாதார வீழ்ச்சியால் மகாராஷ்டிராவுக்கு கடும் பாதிப்பு.. மன்மோகன் சிங் பேச்சு
rs-4000-fine-for-odd-even-violation-vehicles-with-school-children-exempt
டெல்லியில் மீண்டும் வாகனக் கட்டுப்பாடு.. அபராதம் ரூ.4 ஆயிரம்..
amit-shah-ends-speculation-over-who-will-lead-bihar-poll-campaign
நிதிஷ்தான் மீண்டும் முதல்வர்.. அமித்ஷா திட்டவட்டம்..
farooq-abdullahs-sister-suraiya-and-daughter-safiya-were-released-on-bail
காஷ்மீரில் கைதான பரூக் அப்துல்லா மகள், சகோதரி ஜாமீனில் விடுதலை..
p-chidambarams-bail-plea-adjourned-to-18th-oct-supreme-court-in-inx-media-case
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் ஜாமீன் மனு.. அக்.18க்கு ஒத்திவைப்பு
congress-leader-siddaramaiah-met-congress-interim-president-sonia-gandhi-today
சோனியா காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு..
enforcement-directorate-arrests-p-chidambaram-in-inx-media-case
அமலாக்கத் துறை வழக்கிலும் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்..
supreme-court-says-ayodhya-hearing-to-end-at-5-pm-today
அயோத்தி வழக்கு விசாரணை.. மாலை 5 மணிக்கு முடியும்.. சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
madhya-pradesh-roads-will-be-made-smooth-as-hema-malinis-cheeks
ஹேமமாலினி கன்னம் போல் சாலைகள் அமைக்கப்படும்.. ம.பி. அமைச்சர் சர்ச்சைப் பேச்சு
Advertisement
Most Read News
bodies-smashed-bones-ground-to-powder-xi-warns-anti-beijing-forces
சீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்
actor-vishal-to-tie-the-knot-in-2019-confirms-father-gk-reddy
நீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்? புதிய தகவல்..
pm-modi-xi-agree-on-new-trade-mechanism-at-summit-talks-in-mamallapuram
வர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு
ramya-krishnan-reunites-with-her-husband-after-fifteen-years
கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..
akshara-haasan-celebrates-birthday-with-agni-siragugal-team
ரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா
u-s-imposed-sanctions-on-turkey-prepared-to-swiftly-destroy-its-economy
துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..
how-edappadi-palanisamy-became-chief-minister
சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா? தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
prabhas-to-make-announcement-about-wedding-on-his-birthday
பிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா?
bigil-update-thalapathy-vijay-starrer-gets-a-ua-certificate
பிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா?
Tag Clouds