அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஹுஸ்டன் நகரில் நடைபெறும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவருடன் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார்.
ஐ.நா. பொதுச் சபையின் கூட்டம், நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதையொட்டி, ஒரு வார பயணமாக அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு அவர் நாளை ஹுஸ்டன் நகரில் நடைபெறும் ஹவ்டி மோடி என்ற பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் டிரம்ப்பும் பங்கேற்கிறார்.
முன்னதாக, பிரதமர் புறப்படும் போது வெளியிட்ட அறிக்கையில், எனது இந்தப் பயணத்தின் மூலம் சர்வதேச அளவில் தலைமை வகிக்கும் நாடாக இந்தியா உருவெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிக வாய்ப்புகள் உடைய துடிப்புள்ள இந்தியாவை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்துவேன். இந்த பயணத்தின் மூலம் அமெரிக்காவுடன் உள்ள நட்புறவுக்கு மேலும் புத்துணர்வு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.