ஆன்லைன் கேம் விளையாடியதில் ரூ.78 லட்சம் இழந்தவர் தற்கொலை.. குஜராத் ஐ.டி. ஊழியரின் பரிதாப முடிவு..

Gujarat man loses Rs 78L in web poker, commits suicide

by எஸ். எம். கணபதி, Oct 7, 2019, 08:27 AM IST

மொபைல் போனில் ஆன்லைன் கேம் விளையாடி, ரூ.78 லட்சம் கடனாளி ஆகிவிட்ட ஐ.டி. கம்பெனி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

இன்றைய உலகில் மக்கள் மிகவும் அடிமையாகி இருப்பது மொபைல் போனுக்குத்தான். வாட்ஸ் அப் பார்த்து பல பேருக்கு கழுத்து எலும்பு தேய்ஞ்சு போயிருக்கிறது. இது பரவாயில்லை. பலரை மனநோயாளி ஆக்கி விடுகிறது. குஜராத்தில் ஐ.டி.கம்பெனி ஊழியர் ஒருவரின் வாழ்க்கையையே முடித்து விட்டது மொபைல் போன். ராஜ்கோட் மாவட்டம், மோட்டா மோவா பகுதியைச் சேர்ந்த கிருணாள் மேத்தா(39) என்ற இளைஞர் தகவல் தொழில்நுட்பக் கம்பெனியில்(ஐ.டி.) பணியாற்றி வந்தார்.

மொபைல் போனில் யூடியூப், வாட்ஸ் அப் பார்த்து வந்த இவர் எப்படியோ ஆன்லைன் கேம் விளையாடப் பழகி விட்டார். இதில் கொஞ்சம், கொஞ்சமாக பணத்தை இழந்தும் அவரால் அந்த கேம் விளையாடுவதில் இருந்து மீளவே முடியவில்லை. நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கடன் வாங்கி விளையாடத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் ரூ.78 லட்சம் கடன் ஏற்பட்டு விட்டது. இந்நிலையில், அவர் மன உளைச்சலுக்கு உள்ளாகி, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து, மோட்டா மோவா போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்ரம் வன்சாரா கூறுகையில், கிருணாள் தினமும் மொபைல் போனில் போக்கர் பாசி என்ற ஆன்லைன் கேம் விளையாடியிருக்கிறார். இதில் ரூ.78 லட்சம் வரை கடன் ஏற்படவே மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து விட்டார். அவர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

You'r reading ஆன்லைன் கேம் விளையாடியதில் ரூ.78 லட்சம் இழந்தவர் தற்கொலை.. குஜராத் ஐ.டி. ஊழியரின் பரிதாப முடிவு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை