இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக நோபல் பரிசு வென்றவரே கூறியிருந்தும் அது பற்றிய குற்ற உணர்வு மத்திய அரசில் யாருக்கும் இல்லை என்று ப.சிதம்பரம் கமென்ட் அடித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் தற்போது தடுமாறிக் கொண்டிருக்கிறது என்று நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம், தனது குடும்பத்தினர் மூலம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக இந்தாண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற டாக்டர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசில் உள்ள யாருக்குேம குற்ற உணர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. மத்திய அரசு உணரும் வரை நாள் தோறும் 2 பொருளாதாரக் குறியீடுகளை நான் பதிவிடுகிறேன்.
இந்தியாவில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தனிமனிதர் நுகர்வு செலவுகள் குறைந்து விட்டது. ஏழைகள், பொருட்களை வாங்குவது என்பது குறைந்து விட்டது என்பதே இதன் பொருள்.
பசிப்பிணி நாடுகள் குறியீட்டில், 117 நாடுகள் பட்டியலில் 112-வது இடத்துக்கு இந்தியா பின்தங்கியிருக்கிறது. நாட்டில் பசிப்பிணியால் பாதிக்கப்படுவோர் அதிகமாகி விட்டனர் என்பதே இதன் பொருள்.
இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.