பொருளாதார வீழ்ச்சியால் மகாராஷ்டிரா கடும் பாதிப்படைந்துள்ளது. 5 ஆண்டுகளில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மன்மோகன் சிங் கூறியதாவது:
பொருளாதார சரிவால் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா கடுமையாக பாதித்துள்ளது. கடந்த 5 ஆண்டுளில் இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் முடங்கி விட்டன. விவசாயிகளின் தற்கொலையில் மகாராஷ்டிராவே முதலிடம் வகிக்கிறது.
பொருளாதார வீழ்ச்சி, பாஜக அரசின் அக்கறையின்மை போன்றவற்றால் மக்களின் எதிர்பார்ப்புகள் தகர்ந்து விட்டன. மகாராஷ்டிராவில் உற்பத்தி துறை விகிதம் 4வது ஆண்டாக சரிந்து காணப்படுகிறது. மத்திய அரசின் பொருளாதார நிர்வாகம் மோசமான தோல்வியை அடைந்துள்ளது.
இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.