ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடினார் பிரதமர்.. காஷ்மீர் எல்லையில் வீரர்கள் உற்சாகம்

PM Modi celebrates Diwali with army jawans in Kashmir

by எஸ். எம். கணபதி, Oct 27, 2019, 21:38 PM IST

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று(அக்.27) தீபாவளி கொண்டாடினார்.

நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் இனிப்புகள், பட்டாசுகள் மற்றும் புத்தாடைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினர். பிரதமர் நரேந்திர மோடி, காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.

காஷ்மீரில் ரஜவுரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி பிரதமர் மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவருடன் ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத், வடக்கு பிராந்திய லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர்சிங் ஆகியோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர், விமானப் படையினரையும் மோடி சந்தித்து கலந்துரையாடினார். மோடி வருகையால் ராணுவ வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இதன்பின்னர், ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும், ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினேன். அச்சமயம், நாட்டை பாதுகாக்கும் பணியில் அர்பணிப்பு உணர்வுடன் எந்நேரமும் விழிப்புடன் செயல்படும் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தேன். இந்திய மக்களின் சார்பில் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். மேலும், ராணுவ வீரர்களின் நலனுக்காக பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதை அவர்களிடம் கூறினேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

You'r reading ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடினார் பிரதமர்.. காஷ்மீர் எல்லையில் வீரர்கள் உற்சாகம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை