தலைமை நீதிபதியாக பாப்டே நவ.18ம் தேதி பதவியேற்பு.. ஜனாதிபதி உத்தரவு வெளியீடு

Justice Sharad Arvind Bobde appointed next Chief Justice

by எஸ். எம். கணபதி, Oct 29, 2019, 12:50 PM IST

நாட்டின் 47வது தலைமை நீதிபதியாக சரத் அர்விந்த் பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நவம்பர் 18ம் தேதி பதவியேற்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியான சரத் அர்விந்த் பாப்டேவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க, ரஞ்சன் கோகய் பரிந்துரை அனுப்பினார். இதை ஏற்று, நாட்டின் 47வது தலைமை நீதிபதியாக சரத் அர்விந்த் பாப்டேவை நியமித்து ஜனாதிபதி ராம்னாத் கோவிந்த அறிவிப்பு (வாரன்ட்) வெளியிட்டுள்ளார்.

நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, பம்பாய் ஐகோர்ட்டின் நாக்பூர் கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் கூட வழக்கறிஞர்கள்தான். கடந்த 2000ம் ஆண்டில் பாப்டே, மத்தியப் பிரதேச ஐகோர்ட்டில் நீதிபதியாக பொறுப்பேற்றார். கடைசியாக அங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றிய போது, 2012ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி பாப்டே பல்வேறு முக்கிய வழக்குகளில் சிறப்பான தீர்ப்பு கூறியுள்ளார். தற்போது, அயோத்தி நிலம் தொடர்பான ராமஜென்மபூமி வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்விலும் இடம்பெற்றிருக்கிறார். இந்த வழக்கில் நவம்பர் 17ம் தேதி தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading தலைமை நீதிபதியாக பாப்டே நவ.18ம் தேதி பதவியேற்பு.. ஜனாதிபதி உத்தரவு வெளியீடு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை