நீரவ் மோடிக்கு சொந்தமான 9 சொகுசு கார்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி

பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 600 கோடி அளவிற்கு மோசடி செய்த விவகாரத்த்ல் அமலாக்கத்துறை, நீரவ் மோடிக்கு சொந்தமான 9 சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Feb 22, 2018, 11:40 AM IST

பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 600 கோடி அளவிற்கு மோசடி செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறை, நீரவ் மோடிக்கு சொந்தமான 9 சொகுசு கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.

குஜராத் வைர வியாபாரியான நீரவ்மோடி, பஞ்சாப் நேசனல் வங்கியில் ரூ. 11 ஆயிரத்து 600 கோடி அளவிற்கு மோசடி செய்துவிட்டு, இந்தியாவை விட்டு தப்பியோடி இருக்கிறார். அவரதுவீடு மற்றும் நிறுவனங்களில், சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புக்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.

கடந்த வியாழக்கிழமையன்று [15-02-18] ரூ. 5 ஆயிரத்து 100 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளைக் கைப்பற்றிய அதிகாரிகள், வெள்ளிக்கிழமையன்று மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைரத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

இதற்கிடையே சிபிஐ அமைப்பானது, இண்டர்போல் [சர்வதேச காவல்துறை] உதவியை நாடி உள்ளது. முன்னதாக வங்கி மோசடி தொடர்பாக ஜனவரி 31ஆம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்து, ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் விடுத்தது. ஆனால் நீரவ் மோடி, அவருடைய குடும்பத்தார் மற்றும் கூட்டாளிகள் நாட்டைவிட்டு ஜனவரி மாத துவக்கத்திலேயே வெளிநாட்டுக்குத் தப்பினர்.

நீரவ் மோடி விவகாரம், இந்தியாவில் பெரும் களேபரத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவர் கொஞ்சமும் அலட்டலே இல்லாமல் மெக்கா மற்றும் கோலாலம்பூர் நகரங்களில் புதிய நகைக்கடைகளைத் திறந்திருப்பது தெரியவந்தது.

இதுவரை ரூ. 5000 கோடிக்கும் அதிகமான நிரவ் மோடியின் சொத்துக்களை சிபிஐ முடக்கியது. இந்நிலையில், அமலாக்கத்துறை நிரவ் மோடி மற்றும் அவரது நிறுவனங்களுக்குச் சொந்தமான 9 கார்களை பறிமுதல் செய்துள்ளது.

இவற்றில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல் 350 சிடிஐ, போர்சே,, பனாமேரா, ஹோண்டா கார்கள் 3 மற்றும் டொயோடா ஃபார்சூனர், டொயோடா இனோவா ஆகிய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

You'r reading நீரவ் மோடிக்கு சொந்தமான 9 சொகுசு கார்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை