நாடாளுமன்றத்தில் அனைத்து விஷயங்களிலும் வெளிப்படையான விவாதங்கள் நடைபெற விரும்புகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் அனைத்து விஷயங்களிலும் வெளிப்படையான விவாதங்கள் நடைபெறவே விரும்புகிறோம். அவையில் தரமான விவாதங்கள், பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டியது முக்கியம். ஒவ்வொரு உறுப்பினரும் விவாதத்தை சிறப்பாக நடத்த வேண்டும்.
இவ்வாறு மோடி கூறினார்.