முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காங்கிரஸார் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சமாதிக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று காலை சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதே போல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோரும் இந்திராகாந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.