லத்தீன் கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்தது.
சினிமா உலகின் முக்கிய பிரபலங்கள் விழாவில் பங்கேற்றனர். மகிழ்ச்சியுடன் தொடங்கிய விழாவில் திடீர் அதிர்ச்சி காத்திருந்தது. சிலி நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகி மோன் லாஃபர்டேவுக்கு விருது அறிவிக்கப்பட்டிருந்தது. அவருக்கு 36 வயது ஆகிறது. விருது பெறுவதற்காக அவரது பெயர் அறிவிக்கப்பட்டதும் அரங்கில் கரவொலி எழுந்தது. அதேவேகத்தில் கரவொலி அடங்கிப்போய் அமைதியும் அதிர்ச்சியும் பரவியது. பாப பாடகி டாப்லெஸ் ஆக மேடைக்கு வந்துக்கொண்டிருந்தார்.
சிலி நாட்டில் போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலவரம் மூண்டது. அப்போது போலீசார் தாக்கியதில் 20 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு கண்டனம் தெரிவிப்பதற்காகவே பாடகி மோன் லாஃபர்டே டாப்லெஸ் ஆக வந்தாராம்.