ஐந்து நாள்களுக்குப் பின்னர் ஒரு ட்விட்! ஒரு பிரதமருக்கு ஒரு பிரதமரின் வரவேற்பு

by Rahini A, Feb 23, 2018, 08:50 AM IST

இந்தியாவுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் வந்து ஐந்து நாள்களுக்குப் பின்னர் பிரதமர் மோடி இன்று ட்விட்டரில் வரவேற்றுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே ஒரு வார கால சுற்றுப்பயணமாக தனது குடும்பத்துடன் இந்தியா வந்திறங்கி ஐந்து நாள்கள் ஆனது. இதுவரையில் ட்ரூடே குடும்பத்தினர் குஜராத், அகமதாபாத், பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயில், டெல்லி என முக்கிய சுற்றுலாத் தளங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் விழாக்கள் எனக் குடும்பத்துடன் பங்கேற்று வருகின்றனர். 

ஒரு நாட்டின் பிரதமர் இந்தியாவுக்கு வருகை தந்தால் அவரை வரவேற்பது இந்தியப் பிரதமரின் கடமை. ஆனால், 'பிரதமர் தன் கடமைகளை மறந்து எல்லா இடங்களிலும் சுற்றிக்கொண்டிருக்க முடியாது' என மோடி கநடா பிரதமரை வரவேற்காததற்கு அரசு அதிகாரிகள் சார்பாகக் காரணம் சொல்லப்பட்டது. ட்ரூடே தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் என ஆதரவு அளிப்பதுதான் மோடியின் அலட்சியத்துக்குக் காரணம் என தெற்கில் கூறப்பட, காலிஸ்தான் குறித்து பிரதமர் ட்ரூடே பஞ்சாப் முதல்வருடன் நடத்திய ஆதராவால் கண்டுகொள்ளப்படாமல் உள்ளார் என வடக்கிலும் கூறப்பட்டு வருகிறது.

தற்போது ஐந்து நாள்களுக்குப் பின்னர் இன்று ட்ரூடே மோடியைச் சந்திக்க உள்ளார். இதையொட்டி வரவேற்பு அளிப்பதாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வரவேற்றுள்ளார். மேலும் 2015-ம் ஆண்டில் கனடாவுக்குச் சென்ற மோடி அங்கு தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

You'r reading ஐந்து நாள்களுக்குப் பின்னர் ஒரு ட்விட்! ஒரு பிரதமருக்கு ஒரு பிரதமரின் வரவேற்பு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை