பாட்னா: 100 மணி நேரத்தில் 11,244 கழிவறைகளை கட்டி பீகார் மாநிலம் சாதனை படைத்துள்ளது.
மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டில் அக்டோபர் 2ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன் பிறகு, தூய்மை செய்தல், கழிவறைகள் கட்டுதல் உள்ளிட்ட நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல், வரும் 2019ம் ஆண்டுக்குள் கழிவறைகள் இல்லா நாட்டை உருவாக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதை ஏற்றுக் கொண்டு பல்வேறு மாநிலங்கள் வசதியில்லா இடங்களில் கழிவறைகளை கட்டி வருகிறது.
இதை நிறைவேற்றும் வகையில், தெலுங்கானா மாநிலத்தில் 100 மணி நேரத்தில் 10,000 கழிவறைகள் கட்டப்பட்டு அம்மாநிலம் சாதனை படைத்தது. இதை முறியடிக்கும் வகையில், பீகார் மாநிலம், கோபால் கஞ்ச் பகுதியில் 100 மணி நேரத்தில் 11,244 கழிவறைகளை கட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்காக, இந்த பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.