கிரிக்கெட் கிளப்பில் இன்றிரவு.. பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

Maharashtra BJP MLAs to meet at 9 pm today

by எஸ். எம். கணபதி, Nov 26, 2019, 14:33 PM IST

மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு, சட்டசபையில் நாளை நம்பிக்ைக வாக்கெடுப்பு கோரும் நிலையில், இன்றிரவு கிரிக்கெட் கிளப்பில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 56 எம்.எல்.ஏ.க்களை வென்றிருந்த சிவசேனா கட்சி, முதல்வர் பதவியை கேட்டது. தேர்தல் உடன்பாட்டின் போதே இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு தருவதாக பாஜக ஒப்புக் கொண்டிருந்ததாகவும் கூறியது.

ஆனால், இதை பாஜக மறுத்தது. 105 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வர் என்று அறிவித்தது. இதை சிவசேனா ஏற்காததால் கூட்டணி முறிந்தது. இதன்பின், தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முயன்றது. மூன்று கட்சிகளும் 10 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என்று முடிவு செய்தன. இதை கடந்த 22ம் தேதி மாலையில் என்.சி.பி. தலைவர் சரத்பவார் அறிவித்தார்.

ஆனால், மறுநாள் 23ம் தேதி அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். என்.சி.பி. கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக இருந்த அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்குமாறு கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

அதற்கு பிறகு அம்மாநில அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து தங்கள் கூட்டணியில் மாற்றமில்லை என்றனர். மேலும், மும்பையில் தங்கள் கூட்டணியில் 162 எம்.எல்.ஏக்கள் உள்ளதாக கூறி ஓட்டலில் அணிவகுப்பு நடத்தினர்.

இதற்கிடையே, சிவசேனா-என்சிபி-காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் ேகார்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, அம்மாநில சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்கு பட்நாவிஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ளது.
இதையடுத்து, இன்று(நவ.26) இரவு 9 மணிக்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. மும்பை வான்கடே கிரிக்கெட் ஸ்டேடியத்திற்குள் உள்ள கார்வேர் கிளப்பில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இது பற்றி, மத்திய அமைச்சர் ராவ்சாகேப் தான்வே கூறுகையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்கிறோம். நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து எம்.எல்.ஏ.க்களிடம் விவாதிக்கவுள்ளோம் என்றார்.

You'r reading கிரிக்கெட் கிளப்பில் இன்றிரவு.. பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை