மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்.. ராகுல் பேட்டி

by எஸ். எம். கணபதி, Dec 5, 2019, 13:45 PM IST
Share Tweet Whatsapp

மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டு விருப்பப்படி செயல்படுகிறார்கள் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்திற்கு வந்து விட்டு, மதிய உணவுக்காக புறப்பட்டு சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். அவரிடம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்து கொண்டிருப்பது பற்றி கேட்டனர்.

அதற்கு ராகுல்காந்தி பதில் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வெளியுலக தொடர்பு இல்லை. அவர்கள் தங்களுக்கென ஒரு உலகை படைத்து அந்த உலகில் அவர்கள் விருப்பத்தின்படி செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், நாடு இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறது என்றார்.


Leave a reply