நான் சிறையில் இருந்து விடுதலையானதும், முதலில் காஷ்மீர் மக்களுக்காக பிரார்த்தனை செய்தேன் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, 105 நாள் கழித்து நேற்றிரவு 8 மணிக்கு விடுதலையானார். இன்று அவர் நாடாளுமன்றத்திற்கு வந்தார். அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், நான் நேற்றிரவு சிறையை விட்டு வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசித்த போது, காஷ்மீர் தான் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது. கடந்த ஆக.4ம் தேதி முதல் காஷ்மீரில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கும் 75 லட்சம் மக்களைப் பற்றித்தான் முதலில் சிந்தனை ஏற்பட்டது. அவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்தேன் என்று தெரிவித்தார்.