குடியுரிமை சட்டத் திருத்தத்தை 2003ல் மன்மோகன் ஆதரித்தார்.. பாஜக வெளியிட்ட வீடியோ..

by எஸ். எம். கணபதி, Dec 19, 2019, 14:02 PM IST

கடந்த 2003ம் ஆண்டில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து மாநிலங்களவையில் மன்மோகன்சிங் பேசினார் என்று ஒரு வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அசாமில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. இந்த சட்டத்தின்படி, 2014க்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில், பாஜக தனது இணையதளத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசும் பழைய வீடியோவை வெளியிட்டுள்ளது.

மேலும், கடந்த 2003ம் ஆண்டில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மன்மோகன்சிங், குடியுரிமை திருத்தச் சட்டத்தை வலியுறத்தினார் என்று குறிப்பிட்டிருக்கிறது. பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டவர்களுக்கு குடியுரிமை தருவதில் தயவு காட்ட வேண்டுமென அவர் பேசியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும், முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு மட்டும் தர வேண்டுமென அவர் பேசினாரா, இல்லையா என்பதை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

You'r reading குடியுரிமை சட்டத் திருத்தத்தை 2003ல் மன்மோகன் ஆதரித்தார்.. பாஜக வெளியிட்ட வீடியோ.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை