மாதவன் நடித்த இறுதிசுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகமானவர் ரித்திகா சிங். ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது பாக்ஸர், ஓ மை காட் படங்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் ரித்திகா சிங் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். ஒரு ரசிகர், என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா என்று கேட்டார். சக நடிகைகள்போல் ஆசை தோசை அப்பளம் வடை என்று நய்யாண்டி செய்வார் என்று பார்த்தால் குறைந்தது ஐந்து பேரையாவது நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசையை வெளிப்படுத்தி அதிர்ச்சி தந்துள்ளார்.
நேரில் பார்த்தால் உங்களையும் திருமணம் செய்வேன். இதை விளையாட்டாக எடுத்து கொள்ள வேண்டாம், எனக்கு 5 கல்யாணம் செய்து கொள்ள ஆசை. இல்லாவிட்டால் நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என தடாலடியாக கூறி உள்ளார்.