குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீது ஐ.நா. வாக்கெடுப்பு நடத்தட்டும் என்று மம்தா பானர்ஜி பேசியதற்கு மேற்கு வங்க கவர்னர் தங்கார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளர்.
குடியிருப்பு திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பேரணிகளை நடத்தி வருகிறார். கொல்கத்தாவில் நேற்று (டிச.19) நடந்த பேரணியில் அவர் பேசும் போது, குடியிருப்பு திருத்தச் சட்டத்தின் மீது ஐ.நா. வாக்கெடுப்பு நடத்தட்டும்... ஐ.நா. அமைப்பு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் ஆய்வு செய்யட்டும்... அனைத்து கட்சிகளும், அனைத்து அமைப்புகளும் இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கி விடுகிறோம் என்று கூறினார்.
இதற்கு மேற்கு வங்க கவர்னர் ஜெகதீப் தங்கார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி, இந்தியாவின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு தலையீட்டை பகிரங்கமாக கோரியிருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது. முழுக்க, முழுக்க ஏற்றுக் கொள்ள முடியாதது. எனது வேண்டுேகாளை ஏற்காமல் அவர் அப்படி பேசியிருப்பது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது. முதல்வர் அப்படி பேசியது கவலை அளிக்கிறது.
முதல்வர் பதவிப் பிரமாண உறுதிமொழி எடுத்து ெகாண்டதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். தான் அப்படி பேசியதற்கு வருத்தம் தெரிவித்து வாபஸ் பெற வேண்டும். அரசியலமைப்பு சட்டப்படியான பதவியில் உள்ள மூத்த அரசியல்வாதியான அவருக்கு அப்படி பேசினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது நன்றாக தெரியும். தேசத்தை நேசிக்கும் எவருமே அவரது பேச்சை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர் உடனடியாக தனது கருத்தை திரும்பப் பெறுவார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.